தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது - மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான்

4 hours ago 2

டெல்லி,

தமிழக மாணவர்களின் கல்வி சார்ந்த பல்வேறு திட்டக்கூறுகளை நிறைவேற்றுவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதி ரூ.2,152 கோடியும் மத்திய அரசு விடுவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.

புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால் கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனிடையே, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு மக்களவை கூடிய நிலையில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவதாக தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். புதிய கல்விக்கொள்கையை பின்பற்றாததால் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய கல்வி நிதியை தர மத்திய அரசு மறுப்பதாக அவர் கூறினார்.

அப்போது பேசிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தின்கீழ் கையெழுத்துபோட வந்த தமிழ்நாடு அரசு கடைசி நேரத்தில் யூடன் அடித்தது. பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுவதாக தவறாக பரப்புரை செய்யப்படுகிறது. தமிழக மாணவர்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் மாநில அரசு பாழடிக்கிறது' என்றார்.

மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து தி.மு.க. எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர். 

Read Entire Article