மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்..? - அண்ணாமலை கேள்வி

3 hours ago 1

சென்னை,

பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்-அமைச்சருக்கு மூன்று கேள்விகள்.

முதல் கேள்வி:

தி.மு.க.வினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்..? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது கேள்வி:

மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்..?

உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் CBSE மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா..?

மூன்றாவது கேள்வி:

யார் அந்த சூப்பர் முதல்-அமைச்சர்..?

ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, மு.க.ஸ்டாலின் அவர்களே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

முதல் கேள்வி:

திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு @dpradhanbjp அவர்கள் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.

இரண்டாவது கேள்வி:

மக்களின் எண்ணங்களுக்கு… https://t.co/hN32oorgqi

— K.Annamalai (@annamalai_k) March 10, 2025

Read Entire Article