'தமிழக மக்கள் தி.மு.க. அரசின் பிடியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்' - சசிகலா விமர்சனம்

2 months ago 13

மதுரை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தி மற்றும் 62-வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன் செல்வதற்காக, சென்னையில் இருந்து மதுரை வந்த சசிகலா, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தி.மு.க. அரசு வந்ததில் இருந்து எங்கும் தூர்வாரவில்லை என்றும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தமிழக மக்கள் தி.மு.க. அரசின் பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள் என்று விமர்சித்த அவர், 2026-ல் அம்மாவின் ஆட்சி வந்தால்தால் இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறினார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்றும், மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்கள்தான் முதல்-அமைச்சர் ஆவார்கள் என்றும் சசிகலா தெரிவித்தார். 

Read Entire Article