கெஜ்ரிவாலை கொலை செய்ய பாஜக, டெல்லி போலீஸ் சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

7 hours ago 1

புதுடெல்லி,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் அரவிந்த் கேஜ்ரிவாலை கொல்ல சதி செய்ததாக ஆம் ஆத்மி கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. மேலும், பஞ்சாப் மாநில அரசால் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மீண்டும் வழங்க தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சிங் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள்,

பஞ்சாப் போலீசாரால் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மீட்டெடுக்க வேண்டும் என்றும் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தாக்குதல்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளோம். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உத்தரவின்படி, கெஜ்ரிவால் மீதான தாக்குதல்கள் குறித்து மத்திய அரசின் கீழ் வரும் டெல்லி காவல்துறை கண்மூடித்தனமாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.

கெஜ்ரிவாலை கொல்லும் சதியில் பாஜகவும், டெல்லி காவல்துறையும் ஈடுபட்டுள்ளனர். அவரது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருதற்கான சதி செய்கிறார்கள். ஒன்றன்பின் ஒன்றாக அவர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது தாக்குதல் நடத்தியது பாஜக தொண்டரக்ள் என எங்களுடைய விசாரணையில் தெரியவந்தது. எங்களுக்கு டெல்லி போலீசார் மீது நம்பிக்கை இல்லை. அது அமித்ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. கெஜ்ரிவாலின் பாதுகாப்பை திரும்பப் பெற்றது மோசமான அரசியல். இதனால் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article