தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன் ஆயுத பூஜை வாழ்த்து

3 months ago 22

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வுக்கும் அடிப்படை ஆதாரமாக திகழும் அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில் தொழில் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் நாள் ஆயுத பூஜையாகவும், அன்னை மகா சக்தியை வழிபட்டு தொடங்கும் கல்வி, கலை, தொழில் என அனைத்து விதமான நற்காரியங்களும் வெற்றியடைவதற்கான நம்பிக்கையைத் தரும் நாள் விஜயதசமி திருநாளாகவும் மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

அறிவை அள்ளித் தரும் கல்வியையும், வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தித் தரும் தொழில் கருவிகளையும் போற்றி வணங்கும் இந்நாளில் தமிழக மக்கள் அனைவரும் நலமும், வளமும் பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article