பும்ராவுக்கு 10-க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன் - பாகிஸ்தான் வீரர்

4 hours ago 2

கராச்சி,

இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா. பும்ரா தற்சமயத்தில் மிகச்சிறந்த பவுலர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். 2016ஆம் ஆண்டு தோனி தலைமையில் அறிமுகமான அவர் வித்தியாசமான ஆக்சனை பின்பற்றி பவுலிங் செய்தார். அதைப் பார்த்த வல்லுனர்கள் இவரால் நீண்ட காலம் விளையாட முடியாது என்றும் கடினமான டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்க முடியாது என்றும் விமர்சித்தனர்.

ஆனால் அதற்கெல்லாம் அசராத பும்ரா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் அபாரமாக பவுலிங் செய்த அவர் 15 விக்கெட்டுகளை எடுத்து தொடர்நாயகன் விருது வென்று இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். கடந்த பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட பும்ரா 32 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஐ.பி.எல் முதல் சர்வதேச வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விங் பந்துகளை துல்லியமாக வீசுவதில் பும்ரா மிகவும் சிறந்தவர் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பாராட்டியுள்ளார்.

உலகில் சிறந்த பவுலரான அவருக்கு தான் 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன் என்றும் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உண்மையில் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் மிகவும் சிறந்த பவுலராக திகழ்கிறார். அவருடைய ஸ்விங், துல்லியம், அனுபவம் ஆகியவை அற்புதமானது. சமீப காலங்களில் அவர் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார் என்று நான் நினைக்கிறேன்.உலகில் சிறந்த பவுலரான அவருக்கு தான் 10க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article