தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜன. 6-ம் தேதி தொடக்கம்: ஆளுநர் ரவிக்கு அப்பாவு அழைப்பு

4 months ago 12

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் 6-ம் தேதி தொடங்கும் நிலையில், முதல் நாள் கூட்டத்தில் உரையாற்ற வருமாறு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு நேற்று அழைப்பு விடுத்தார்.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த வகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் உரையாற்றி வருகிறார். ஒரு கூட்டத்தில் ஆளுநர் தனது உரையை முழுமையாகப் படிக்காததால், சர்ச்சை ஏற்பட்டது.

Read Entire Article