தமிழக கவர்னர் அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாகவே நடந்து கொள்கிறார் - துரை வைகோ பேட்டி

5 hours ago 2

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. தலைமை தாங்கினார். பின்னர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழகத்திற்கு வந்த நாள் முதல் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக செயல்பட்டு இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு புறம்பாகவே நடந்து கொள்கிறார். மத்திய அரசின் தூண்டுதலால்தான் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் மீது ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

டாஸ்மாக் நிறுவனங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் கால் ஊன்றக் கூடாது என்பதற்காகத்தான் தி.மு.க.வுடன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் ம.தி.மு.க. கூட்டணி அமைத்தது. மேலும் தி.மு.க. கூட்டணியில் நாங்கள் அங்கம் வகிப்பது என்பது, தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கைக்காக அல்ல. பொது நன்மைக்காகவும், மதவாத சக்திகளை எதிர்ப்பதற்காகவும்தான்.

தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்தபோது பொருளாதார நெருக்கடி இருந்தது. பொருளாதார நெருக்கடியை சீரமைக்க தமிழக அரசுக்கு ஒரு வருடம் தேவைப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article