தமிழக ஆளுநர் டெல்லி பயணம்

6 hours ago 3


மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி புதுடெல்லி புறப்பட்டு சென்றார். மே 18ம் தேதி சென்னைக்கு திரும்புகிறார். சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென 4 நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றார். செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி உடன் சென்றனர். மே18ம் தேதி காலை ஏர்இந்தியா பயணிகள் விமானம் மூலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னைக்குத் திரும்பி வருகிறார்.

தமிழ்நாடு ஆளுநரின் இந்த திடீர் டெல்லி விசிட்டுக்கு என்ன காரணம் என்று அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இது அவரது வழக்கமான டெல்லி பயணம்தான் என்று கூறப்படுகிறது. இந்த 4 நாள் டெல்லி விசிட்டில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு ஆளுநரின் திடீர் 4 நாள் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தமிழக ஆளுநர் டெல்லி பயணம் appeared first on Dinakaran.

Read Entire Article