தமிழக ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்: சென்னையில் திமுக எம்.பி.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு

4 months ago 12

சென்னை: “ஆளுநருக்கு ஏன் அரசியல். ஆளுநர் அரசியல் பேச வேண்டிய தேவை, அவசியம், நியாயம் இல்லை. கேரளா, மணிப்பூர், பிஹார், உள்ளிட்ட மாநிலங்களில் எல்லாம் ஆளுநர்களை மாற்றிய மத்திய அரசே, தமிழகத்தில் மட்டும் ஏன் இவரை சாசனம் எழுதி வைத்தது போல மாற்றாமல் வைத்திருக்கிறது பாஜக” என்று திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டித்தும், மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழகத்தின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், மத்திய அரசின் மீதுள்ள தமிழக மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக - பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article