பணி: டைப்பிஸ்ட். மொத்த இடங்கள்: 50.
வயது: 01.07.2024 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ அருந்ததியர்/எஸ்டி/மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 10ம் வகுப்பிற்கு மேல் படித்த எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தகுதி: குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் உயர்நிலை (Higher Grade) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தமிழில் உயர்நிலை ஆங்கிலத்தில் கீழ் நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழக அரசின் ‘‘ கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்’ பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழி திறனறி தேர்வு, பொது அறிவு, அடிப்படை கணித பாடங்கள் அடங்கிய எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் தட்டச்சுத் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: தேர்வுக் கட்டணமான ரூ.100 ஐ ஆன்லைனில் செலுத்தவும். டிஎன்பிஎஸ்சி இணைய
தளத்தில் ‘One Time Registration’ முறையில் ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ளவும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு 2025ம் ஆண்டு பிப்.8ம் தேதி நடைபெறும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2024.
The post தமிழக அரசுத் துறைகளில் டைப்பிஸ்ட் பணியிடங்கள் appeared first on Dinakaran.