தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் பணியிடங்களுக்கு மருத்துவத் தேர்வு வாரியம் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பணி: Physiotherapist.
மொத்த இடங்கள்: 47.
வயது: 18.10.2024 அன்று 18 லிருந்து 32க்குள். பொதுப் பிரிவினர்களில் மாற்றுத் திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/முஸ்லிம்/ சீர் மரபினர் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ.36,200-1,14,800.
தகுதி: அறிவியல் அல்லது கணித பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பிசியோதெரபி பாடத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். படிப்பானது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நல்ல திடகாத்திரமான உடற்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000/-. எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500/-. மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் தமிழ் மொழித் திறனை பரிசோதிக்கும் கேள்விகள் மற்றும் பிசியோதெரபி பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை 07.11.2024.
The post தமிழக அரசு மருத்துவமனைகளில் பிசியோதெரபிஸ்ட் appeared first on Dinakaran.