தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 499 இடங்கள்

3 months ago 21

பயிற்சி விவரம்:

1. Graduate Apprentices (Engineering): 201 இடங்கள். உதவித் தொகை ரூ.9,000. பயிற்சி வழங்கப்படும் பிரிவுகள்: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்/சிவில் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். தகுதி: மேற்குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., படித்திருக்க வேண்டும்.

2. Graduate Apprentices (Non-Engineering): 158 இடங்கள். உதவித் தொகை ரூ.9,000. தகுதி: பி.ஏ/ பிஎஸ்சி/பி.காம்/பிபிஏ/பிசிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

3. Diploma Apprentices (Technician Apprentice): 140 இடங்கள். உதவித் தொகை ரூ.8,000. தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ஆட்டோமொபைல் இன்ஜினியரிங்/சிவில் இன்ஜினியரிங்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் மூன்றாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங்.2020,2021, 2022,2023,2024ம் கல்வியாண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள், தற்போது பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

டிப்ளமோ, பி.இ., கலை, அறிவியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.போக்குவரத்து பணிமனை வாரியாக உள்ள காலியிடங்கள் விவரத்தை இணையதளத்தில் பார்க்கலாம்.

www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த இணையதளத்தில் வழங்கப்படும் Unique Enrollment Number ஐ பயன்படுத்தி அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ‘டாப் டவுன் பட்டனை’ ஐ கிளிக் செய்து, அதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தை தேர்வு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.10.2024.

 

The post தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 499 இடங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article