
சென்னை,
தமிழக அரசு சென்னையில் ஏப்ரல் 28-30, 2025 வரை 3 நாட்கள் இலவச ட்ரோன் பயிற்சி முகாம் நடத்துகிறது. ட்ரோன் செயல்பாடு, பராமரிப்பு மற்றும் விதிகள் பற்றி கற்றுக்கொள்ளுங்கள். குறைந்த இடங்களே உள்ளன, உடனே விண்ணப்பிக்கவும்
இந்த பயிற்சி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 2 இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600032 என்ற முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி எண்கள்: 9360221280 / 9543773337.