தமிழக அரசிடம் ரூ.1.78 கோடி ஈவுத்தொகைக்கான காசோலையை நிதி அமைச்சரிடம் வழங்கியது ரெப்கோ வங்கி

1 hour ago 1

சென்னை: ரெப்கோ வங்கியின் தலைவர் இ. சந்தானம் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு). ஓ.எம். கோகுல் ஆகியோர் 2023-2024ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பங்கு மூலதனமான ரூ.7.13 கோடிக்கான 25% ஈவுத் தொகையான ரூ.1.78 கோடிக்கான காசோலையை 26.11.2024 அன்று சென்னையில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத் துறை அமைச்சர், தங்கம் தென்னரசிடம் தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பொது மற்றும் மறுவாழ்வுத் துறை துணைச் செயலாளர் பவன்குமார் க கிரியப்பனவர், இ.ஆ.ப., மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் பி. கிருஷ்ணமூர்த்தி, IOFS., முன்னிலையில் வழங்கினர்.

ரெப்கோ வங்கி கடந்த 2023-2024ஆம் நிதியாண்டில் வர்த்தகத்தில் 11% வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் தற்போதைய வர்த்தகம் ரூ.20,500 கோடியை தாண்டியுள்ளது. மாநில அரசுகளில் தமிழக அரசின் பங்கு மூலதனம் அதிகமாக இருப்பதால், ஈவுத்தொகையினைத் தமிழக அரசு பெறுகிறது.

The post தமிழக அரசிடம் ரூ.1.78 கோடி ஈவுத்தொகைக்கான காசோலையை நிதி அமைச்சரிடம் வழங்கியது ரெப்கோ வங்கி appeared first on Dinakaran.

Read Entire Article