
புதுடெல்லி,
தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை மறுவிசாரணை நடத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் கபில்சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்களை இணைத்து விசாரிக்க ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்ததுடன், வழக்கு விசாரணையை வேறு அமர்வு முன் பட்டியலிடவும் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணைக்கு விதித்த இடைக்கால தடை உத்தரவையும் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.