
ஜெய்சால்மர்,
ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாங்கிவாலா பகுதி, 1971-ம் ஆண்டு நடந்த இந்தோ-பாகிஸ்தானிய போரின்போது பிரபலமடைந்தது. எல்லைப்புற நகரான இந்த பகுதியும், லாங்கிவாலா போர் நினைவகமும், இந்திய ராணுவ வரலாற்றில் முக்கியம் வாய்ந்த அடையாளங்கள் ஆகும்.
இந்நிலையில், இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவிவேதி இன்று லாங்கிவாலா பகுதிக்கு சென்றார். தேச வரலாற்றில் துணிச்சலும், தியாகமும் பதிவு செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்த இடம் அது. இந்த தனித்துவம் வாய்ந்த போர்க்களம், பல தலைமுறைகளுக்கும் தங்களுடைய தைரியம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் உந்துதலை ஏற்படுத்தி, அன்னை நாட்டை பாதுகாத்த வீரர்களின் ஈடுஇணையற்ற மனவுறுதி மற்றும் வீரம் ஆகியவற்றை அடையாளப்படுத்துகிறது என அவர் அழுத்தி கூறினார்.
இதன்பின்னர், கோனார்க் கார்ப்ஸ், இந்திய விமான படை, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் அரசு நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளுடன் அவர் உரையாடினார். அப்போது, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, வெல்ல முடியாத மனவுறுதி மற்றும் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக அவர்களை பாராட்டினார்.
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் சமீபத்தில் எதிரிகள் நடத்திய தாக்குதலின்போது, தேச பாதுகாப்பிற்காக தங்களுடைய தனித்துவம் வாய்ந்த தைரியம், நடவடிக்கைக்கு தயாராதல் மற்றும் இடைவிடாத ஈடுபாடு ஆகியவற்றிற்காக வீரர்களை அவர் புகழ்ந்துள்ளார்.
வருங்காலத்தில் எதிரிகள் எந்தவித தாக்குதலையாவது நடத்த முற்பட்டால், அதனை இந்திய ராணுவத்தின் உறுதியான படையால் பதிலடி தரப்படும் என்று கூறினார்.