சென்னை: தமிழ்நாட்டில் தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 1991ம் ஆண்டில் வேளாண் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டு, ஆண்டுக்கு 4,000 மாணவர்கள் படிப்பை முடித்து வெளியே வருகின்றனர். இங்கு படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் வேளாண் கல்லூரி அமைக்க அனுமதி அளிக்கும் திட்டம் உள்ளதா என்று உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர் பதில் தெரிவித்தார்.
The post தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.