தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மேலும் 7 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

3 months ago 30

தானே,

மராட்டிய மாநிலம் தானே பகுதிக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று எப்போதும் போல 8 முதல் 11 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பள்ளியில் மதிய உணவை உட்கொண்டனர். அதன்பின்னர் அவர்களுக்கு தலைச்சுற்றல், குமட்டல், தலைவலி மற்றும் வயிறு வலி ஏற்பட்டது.

இதையடுத்து, 38 மாணவர்கள் நேற்று கல்வா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 7 இன்று அதிகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இதுவரை 45 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைத்து மாணவர்களும் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், உடல்நிலை சரியென கண்டறியப்பட்டால் இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று மருத்துவமனையின் மருத்துவப் பொறுப்பாளர் டாக்டர் அனிருத்தா மல்கோன்கர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article