சென்னை: சட்டசபையில் பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கிள்ளியூர் செ.ராஜேஷ் குமார் (காங்கிரஸ்) பேசியதாவது: இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி பொருளாதார, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் சம பங்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்களை இயற்ற வழிவகை செய்திட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக மிக அவசியம் என்பதை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சனாதன சக்திகளை எதிர்த்து மிகப் பெரிய அளவில் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி நீதியை, நியாயத்தை நிலைநாட்டியுள்ள நம்முடைய முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்தி முடித்திட வேண்டும். அரசினுடைய பல்வேறு சலுகைகளைப் பெற்று இங்கே தொழில் நடத்தி வருகின்ற பெருநிறுவனங்களில், அரசுத் துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வின்போது அமல்படுத்தப்படும் இட ஒதுக்கீட்டு முறையை தனியார் நிறுவனங்களிலும் கட்டாயமாக அமல்படுத்திட சட்டம் இயற்றி, இந்திய நாட்டிற்கு வழிகாட்டும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க காங். எம்எல்ஏ வேண்டுகோள் appeared first on Dinakaran.