நாமக்கல், ஜன.25: நாமக்கல்லில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நேற்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். இதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 29 தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து 164 பட்டதாரிகள் கலந்து கொண்டனர். இதில் தங்களின் நிறுவனங்களின் தேவைப்படும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தனியார் அலுவலர்கள் தேர்வு செய்தனர்.முகாமில் 52 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.
The post தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.