புதுடெல்லி: அரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 90 தொகுதிகளில் போட்டியிட்டு, ஒரு இடத்தை கூட அது பெறவில்லை. மேலும், 2% க்கும் குறைவான வாக்குகளை மட்டுமே பெற்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர் நேற்று அளித்த பேட்டியில், ‘டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும்.
ஒரு பக்கம் அதீத நம்பிக்கை கொண்ட காங்கிரசும், மறுபுறம் திமிர் பிடித்த பாஜ.வும் இருக்கிறது. அவற்றை நாங்கள் தோற்கடிப்போம். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் நாங்கள் செய்த சேவைகளை முன்னிறுத்தி, தேர்தலில் போட்டியிடுவோம்,’ என தெரிவித்தார். கடந்த 2020ல் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி 70 இடங்களில் 62 இடங்களை வென்றது. பாஜ 8 இடங்களை மட்டுமே பெற்றது.
The post தனித்து தான் போட்டி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை: ஆம்ஆத்மி அறிவிப்பு appeared first on Dinakaran.