தனது 29-வது பிறந்தநாளை ராஷ்மிகா எங்கு கொண்டாடி இருக்கிறார் தெரியுமா? - வைரலாகும் புகைப்படங்கள்

19 hours ago 3

மஸ்கட்,

அனிமல், புஷ்பா மற்றும் தமிழில் விஜய்யுடன் வாரிசு திரைப்படங்களில் நடித்து நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபலமானார். சமீபத்தில் சிக்கந்தர் திரைப்பட வெளியீட்டு விழாவுக்கு துபாய் சென்றார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா தனது 29-வது பிறந்த நாளை நேற்று ஓமன் நாட்டின் அழகிய இயற்கை பகுதியான சலாலாவில் கொண்டாடினார்.

சலாலா மலை, கடல் என அனைத்து விதமான இயற்கை அம்சங்களும் நிறைந்த பகுதியாகும். இதில் சலாலாவின் கடற்கரை பகுதியை தேர்வு செய்து தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.

அமைதி மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் தனது பிறந்த நாளை கொண்டாட விரும்பியதாக அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர். கடற்கரை அருகே உள்ள சொகுசு விடுதியில் அவர் அமர்ந்து உணவருந்தும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

Read Entire Article