தனக்கென புது பாதையை விஜய் வகுக்கவில்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

3 months ago 12

புதுச்சேரி: தவெகவின் புதிய கொள்கை பற்றி ஒரு இடத்தில்கூட விஜய் குறிப்பிடவில்லை என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று அளித்த பேட்டி: தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் திட்டங்கள் முழுமையாக போய் சேரவில்லையென துணைநிலை ஆளுநர் கூறியிருக்கிறார். இதன்மூலம் என்.ஆர் காங்கிரஸ் பாஜ ஆட்சியில் மக்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை முடக்கியுள்ளதை பார்த்து, துணைநிலை ஆளுநர் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆட்சியாளர்கள் மீது துணைநிலை ஆளுநர் அதிருப்தியில் உள்ளார் என்பது தெரிகிறது.

புதுச்சேரியில் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் என்.ஆர்.ஐ இடஒதுக்கீட்டில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. என்ஆர்ஐ இடஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ் கொடுத்து மருத்துவ இடங்களை பெற்ற விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். விஜய்யின் புதிய கொள்கை என்ன என்பதை ஒரு இடத்தில்கூட குறிப்பிடவில்லை. எல்லா கட்சிகளும் கூறியதைத்தான் விஜய் சொல்லியிருக்கிறார். விஜய் தனக்கென ஒரு புதிய பாதையை வகுப்பார் என்ற மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post தனக்கென புது பாதையை விஜய் வகுக்கவில்லை: முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article