வாழப்பாடி, மே 11: வாழப்பாடி அருகே தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் மதுபோதையில் சொந்த வீட்டிற்கு மகன் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழப்பாடி அருகே திருமானூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(45). கூலி தொழிலாளியான இவரது மனைவி செல்வி(40). இந்த தம்பதிக்கு சூர்யா(25) என்ற மகன் உள்ளார். நேற்று மதியம் தந்தை-மகன் வீட்டில் இருந்தபோது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்தனர். இதையடுத்து, சூர்யா வெளியில் சென்று விட்டார்.
இந்நிலையில், அவர்களது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால், வீட்டிலிருந்த சுரேஷ் மற்றும் செல்வி ஆகியோர் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்து உயிர்தப்பினர். உடனே, அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீணை அணைத்தனர். தந்தையுடன் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சூரியா மதுபோதையில் வீட்டிற்கு தீ வைத்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், வாழப்பாடி போலீசார் விசாரித்து வருகின்னர். சொந்த வீட்டிற்கு மகன் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தந்தையுடனான தகராறில் வீட்டிற்கு தீ வைத்த மகன் appeared first on Dinakaran.