தண்ணீர் லாரி மோதி மாற்றுத்திறனாளி பலி

2 months ago 12

வேளச்சேரி: கோவிலாஞ்சேரியில் குடிநீர் லாரிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனம் மற்றும் டாஸ்மாக் கடை அருகருகே உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த பகுதியில், மாற்றுத்திறனாளி ஒருவர் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த தண்ணீர் கம்பெனி மோட்டார் ஆபரேட்டர் சாமுவேல், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் மற்றும் பள்ளிகரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், குடிநீர் கம்பெனிக்கு வந்த டேங்கர் லாரியை, பின்னோக்கி இயக்கிய போது, அங்கு தரையில் படித்திருந்தவர் தலை மீது ஏறி இறங்கியதில், தலை நசுங்கி இறந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், சித்தாலப்பாக்கம், என்.எஸ்.கே.தெருவை சேர்ந்த கந்தசாமி (48) என்பதும், இவர் வீட்டின் அருகில் உள்ள உணவகத்தில் காய்கறி வெட்டும் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மது ேபாதையில் மயங்கி கிடந்த போது, லாரி மோதி இறந்ததும் தெரிந்தது.

இவருக்கு மனைவி திலகவதி மற்றும் மகள் மிருத்திகா ஆகியோர் உள்ளனர். இதையடுத்து, போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, தலைமறைவான தண்ணீர் லாரி டிரைவர் திருநெல்வேலியை சேர்ந்த முத்துக்குமார் (26) என்பவரை கைது செய்தனர்.

The post தண்ணீர் லாரி மோதி மாற்றுத்திறனாளி பலி appeared first on Dinakaran.

Read Entire Article