
சென்னை,
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இணைந்து தற்போது 'தண்டேல்' படத்தில் நடித்து வருகின்றனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இப்படத்தை சந்து மொண்டெட்டி இயக்குகிறார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி வாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
சேகர் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரியும்நிலையில், இப்படத்தின் சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பு 1,000 நடனக் கலைஞர்களுடன் மிக பிரமாண்டமாக நடந்து உள்ளது. இது குறித்தான புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மேலும், இப்பாடலுக்கு ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் டிசம்பர் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.