தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 18 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

4 hours ago 2

சென்னை: பொன்னேரி – கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக இன்று 18 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. சென்னை-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளது. பயணிகளுக்காக சென்ட்ரல்-பொன்னேரி, மீஞ்சூர், எண்ணுர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். காலை 10.15 முதல் ரயில்கள் ரத்து என ஒரு மணி நேரம் முன்னதாக அறிவிப்பால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

சென்னையில் மிகவும் முக்கியமான போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம் ஆகும். இந்த ரயில்களை வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

அதன்படி பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதன்படி பிற்பகல் 1.20 மணி முதல் மாலை 5.20 மணி வரை 4 மணி நேரம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதற்கு ஏற்றபடி பயணிகள் வசதிக்காக இன்று சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேமாதிரி கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி இடையே மதியம் 1.20 மாலை 5.20 வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் மூர் மார்க்கெட்-சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

 

 

 

 

 

 

 

The post தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக 18 ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article