சென்னை: தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் சில செய்திகள் பரவுகின்றன. அதில் உண்மையில்லை என இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இதுகுறித்து IRCTC எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;
“தட்கல் மற்றும் பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளுக்கான வெவ்வேறு நேரங்கள் குறித்து சமூக வலைதளத்தில் சில பதிவுகள் பரவி வருகின்றன.
ஏசி அல்லது ஏசி அல்லாத வகுப்புகளுக்கான தட்கல் அல்லது பிரீமியம் தட்கல் முன்பதிவு நேரங்களில் தற்போது அத்தகைய மாற்றம் எதுவும் முன்மொழியப்படவில்லை.
முகவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட முன்பதிவு நேரங்களும் மாறாமல் உள்ளன” என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
The post தட்கல் ரயில் டிக்கெட் புக்கிங் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியில் உண்மையில்லை: IRCTC விளக்கம் appeared first on Dinakaran.