திருப்பூர், மே 14: திருப்பூர் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர். திருப்பூரில் அதிகப்படியான பனியன் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த பனியன் தொழில்களில் பணியாற்ற வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் வருகைக்கு ஏற்ப வாகனங்களும், வணிக நிறுவனங்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகர பகுதியில் வாகன பெருக்கத்திற்கேற்ப சாலைகள் வசதிகள் இல்லை. இந்நிலையில் திருப்பூரின் முக்கிய பகுதிகளான பார்க் ரோடு, காமராஜ் ரோடு, குள்ளிசெட்டியார் வீதி, பெரியகடை விதீ, மாநகராட்சி அருகாமை பகுதிகளில் உள்ள வணிக நிறுவத்திற்கு வரும் பொதுமக்கள் ரோடுகளில் தங்களது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி சென்று விடுகிறார்கள். அப்படி ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த போக்குவரத்து நெருக்கடிக்கும், ரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதற்கும் தீர்வு ஏற்படுத்த கோரி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் பார்க் ரோடு பகுதிகளில் தடை செய்யப்பட்ட இடத்தில் ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் வீல் லாக் செய்து அபராதம் விதித்தனர்.
The post தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 சக்கர வாகனங்களுக்கு போலீசார் அபராதம் appeared first on Dinakaran.