தஞ்சையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

1 month ago 15

தஞ்சாவூர்,ஏப்.4: தஞ்சையில் போதைப்பெருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. தஞ்சையில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு குறித்த மாவட்ட அளவிளான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடந்த இப்பயிற்சியை மாவட் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட அளவிலான இவ்விழிப்புணர்வு பயிற்சியில் அரசு, அரசு உதவிப் பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் என 750 பேருக்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித், மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பூஷண குமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் சுந்தர், அய்யாகண்ணு, மதியழகன், பழனிவேல், உதவி திட்ட அலுவலர் ரமேஷ், முதன்மைக் கல்வி அலுவலக பள்ளித் துணை ஆய்வாளர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post தஞ்சையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி appeared first on Dinakaran.

Read Entire Article