தஞ்சை மாவட்டத்தில் மயில்கள் வேட்டையாடப்படுகிறதா?

1 week ago 2

*வனத்துறை விசாரணை நடத்த கோரிக்கை

தஞ்சாவூர் : தஞ்சை மாவட்டத்தில் மயில்கள் மனிதர்களால் வேட்டையாடப்படுகிறதா? அல்லது நாய், நரிகளால் கொல்லப்படுகிறதா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மயில்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. தஞ்சை மாநகரில் அருங்காட்சிய வளாகம், பெரிய கோவில், ராஜாளி கிளி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் அதிகளவில் வலம் வருகின்றன.

அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளான சாமிபட்டி, கோபால் நகர், காசவளநாடுபுதூர், மாரியம்மன் கோவில் அம்மாபேட்டை சாலியமங்கலம் போன்ற பகுதிகளிலும் மயில்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகிறது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அறுவடைகள் முடிந்துள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட வயில்களில் இறை தேடுவதற்காக மயில்கள் வந்து செல்கிறது. அவ்வாறு வரும்போது சாலைகளை கடக்கும் போது வாகனத்தில் மோதி ஒரு சில மயில்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும்வய ல்களில் இறை தேடும்போது நாய் அல்லது நரிகள் மூலமும் வேட்டையாடப்படுகிறது.

இந்த நிலையில் தஞ்சையை அடுத்த காச வளநாடு புதூர் பகுதியில் ஆண் மயில் ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடைக்கிறது. இந்த மயில் மனிதர்களால் வேட்டையாடப்படுகிறதா அல்லது நாய் நரிகளால் கொல்லப்படுகிறதா என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தஞ்சை மாவட்டத்தில் மயில்கள் வேட்டையாடப்படுகிறதா? appeared first on Dinakaran.

Read Entire Article