தஞ்சை: தஞ்சாவூர் – கும்பகோணம் புறவழி சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சென்னை சேர்ந்த குமார் (52), துர்கா(32), நிவேனி சூர்யா (3) ஆகிய மூன்று பேரும் செல்லும் வழியில் பலியாகினர். இந்த விபத்தில் மோனிஷா, ஸ்டாலின், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post தஞ்சை அருகே காரும், சரக்கு வாகனமும் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.