டாடா நிறுவனம், ஹாரியர் இவியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஹாரியர் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்களின் முழு விலை விவரங்களையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி துவக்க வேரியண்டான அட்வஞ்சர் 65 ஷோரூம் விலை சுமார் ரூ.21.49 லட்சம். இதுேபால், அட்வஞ்சர் எஸ் 65 சுமார் ரூ.21.99 லட்சம், பியர்லெஸ் பிளஸ் 65 சுமார் ரூ.23.99 லட்சம், பியர்லெஸ் பிளஸ் 75 சுமார் ரூ.24.99 லட்சம், டாப் வேரியண்டான எம்பவர்டு 75 சுமார் ரூ.27.49 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. துவக்க வேரியண்ட் அறிமுகச் சலுகை விலையாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் காரில் 75 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் எம்ஐடிசி சான்றளித்துள்து. 7.2 கிலோவாட் ஏசி சார்ஜர் மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய 10 மணி நேரத்துக்கு மேல் ஆகும். 120 கிலோவாட் அவர் டிசி அதிவேக சார்ஜரில் 25 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக சார்ஜ் செய்யலாம்.
The post டாடா ஹாரியர் இவி appeared first on Dinakaran.