தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

3 days ago 3

தஞ்சாவூர், மார்ச்30: 100 நாள் வேலை கூலி தராத ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகு தியாக தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் 1,000 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவோணம், வெட்டிக்காடு, சில்லத்தார், உள்ளிட்ட 10 கிராம பெண்கள் 1,000க்கும் மேற்பட்டோர் திருவோணம் ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான மகேஷ் கிருஷ்ணசாமி தலைமையில், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், தொழிலாளர், திமுகவினர், விவசாயிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசு பல மாதங்களாக செய்த வேலைக்கு கூலி தராததால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாக பெண்கள் வேதனை தெரிவித்தனர். ஊதியம் நிலுவை வைத்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு ஆளவதாகவும், உடனடியாக ஊதியத்தை மோடி அரசு வழங்கிட வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேபோல் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டிகேஜி நீலமேகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதே போல் அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவோணம், திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், திருவையாறு, ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், பட்டு க்கோட்டை உள்ளிட்ட தஞ் சாவூர் மாவட்டம் முழு வதும் ஒன்றிய பகுதிகளில் ஆர் ப்பாட்டம் நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளி: பூதலூர் நால்ரோட்டில் நூறுநாள் வேலை திட்டத்திற்கான நிதியை தராத ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூதலூர் நால் ரோட்டில் பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவருமான கல்லணை செல்லக்கண்ணு தலைமையில் 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திருக்காட்டுப்பள்ளி பேரூர் கழகசெயலா ளர் ஜெயராமன், பேரூரா ட்சி தலைவர் மெய்யழகன் உட்பட கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

கும்பகோணம்: தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், கும்பகோணம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் மருதாநல்லூர் கடைவீதி மற்றும் திருவலஞ்சுழி கடைவீதியில் ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம் தலைமையில் 100 நாள் வேலை உறுதித் திட்டம் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

ஒரத்தநாடு: ஏழை எளியோர் வயிற்றில் அடிக்கும் மோடி அரசை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்டம் ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பொய்யுண்டார்கோட்டை, செல்லம்பட்டியில் ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரமேஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

திருவையாறு: திருவையாறு அருகே கோணேரி ராஜபுரத்தில் தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி, மாவட்ட பிரதிநிதிகள் ராமமூர்த்தி, புண்ணியமூர்த்தி, உள்ளிட்ட திமுக பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 44 இடங்களில் ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article