தஞ்சாவூர் அருகே காத்தையா சுவாமிகளின் 28ம் ஆண்டு குருபூஜை விழா

3 weeks ago 5

தஞ்சாவூர், அக். 21: தஞ்சாவூர் அருகே வாளமர்கோட்டையில் சித்தர் மாதவமணி காத்தையா சுவாமிகளின் 28ம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி சவுந்தரநாயகி, சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் சித்தர் மாதமணி காத்தையா சுவாமிக்கு குருபூஜை நடந்தது. இதையடுத்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வாளமர்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவர் சுந்தராசு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தவமணி, ரெங்கராஜ், சுப்பைபயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வக்கீல் சுந்தரமூர்த்தி வரவேற்றார்.

மனவளக்கலை மன்ற பேராசிரியர்கள் பஞ்சாபிகேசன், மன்னன் உமாசங்கர், புருஷோத்தமன் ஆகியோர் யோகா பயிற்சி குறித்து விளக்கினர். சென்னை ஐகோர்ட் வக்கீல் குபேந்திர குணபாலன் வனவாசம் எனும் தலைப்பில் பேசினார். தேசிய கோயில் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஆதிநெடுஞ்செழியன் கோயில்கள் பாதுகாப்பு ஏன் எனும் தலைப்பில்பேசி னார். கோவிந்தராஜன்,டாக்டர்கள் ஞானரூபினி, யாழினி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு டாக்டர் ராஜேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். இளங்கோவன் நன்றி கூறினார்.

The post தஞ்சாவூர் அருகே காத்தையா சுவாமிகளின் 28ம் ஆண்டு குருபூஜை விழா appeared first on Dinakaran.

Read Entire Article