
சென்னை,
தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 155-க்கும், ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேற்று ஒரு கிராம் ரூ.85-ம், ஒரு பவுன் ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 70-க்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலைகிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.119-க்கும், கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆபரண தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.72,560க்கும், ஒரு கிராம் ரூ.9,070க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.