சென்னை: தங்கம் விலை கடந்த 14ம் தேதி ஒரு பவுன் ரூ.74,560க்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்தது. அதாவது, கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.9,230க்கும், பவுனுக்கு ரூ.40 குறைந்து ஒரு பவுன் ரூ.73,840க்கும் விற்றது. இந்த நிலையில், 2வது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைவை சந்தித்தது.
நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.9,155க்கும், பவுனுக்கு ரூ.600 குறைந்து ஒரு பவுன் ரூ.73,240க்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. அதே நேரத்தில் நேற்றுடன் சேர்த்து கடந்த 4 நாட்களாக வெள்ளி விலையில் ஏந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.120க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.600 குறைந்தது appeared first on Dinakaran.