தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக உயர்வு

4 hours ago 2

சென்னை,

தங்கம் விலை நேற்று முன்தினம் மாற்றமின்றி விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.8,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கம் விலை ஒரே நாளில் இன்று 2-வது முறையாக உயர்ந்து உள்ளது. தங்கத்தின் விலை மாலையில் கிராம் ஒன்று ரூ.75 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,025 ஆக இருந்த நிலையில், இன்று 2-வது முறையாக விலை அதிகரித்து ரூ.9,100 ஆக உயர்வடைந்து உள்ளது.

இதேபோன்று, பவுன் ஒன்று ரூ.72,200 ஆக இருந்த நிலையில், மீண்டும் இன்று மாலை விலை உயர்ந்ததில் ரூ.72,800 ஆக அதிகரித்து காணப்படுகிறது. அதன் விலை மாலையில் பவுனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்வை தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த விலை உயர்வு காணப்படுகிறது.

Read Entire Article