
சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு பவுன் ரூ.72,640-ஆகவும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,080 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.72,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090-க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கும் ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.114-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.