சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் ரூ.72,000ஐ நெருங்கியது. இதனால் நகை வாங்க கருதி இருந்தவர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைந்தனர். சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்றபடி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. இம்மாதம் மே 15ம் தேதி ஒரு பவுன் ரூ.68,660-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680க்கு விற்பனையானது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்தது.
அதன்படி, கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,930-க்கும், பவுனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் தங்கம் வாங்க நினைத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,000ஐ நெருங்கியது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,975க்கு விற்பனையாகிறது. அதே போல், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.71,800க்கு விற்பனைக்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.2,120 உயர்ந்துள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்து வியாபார சங்கத்தினர் கூறுகையில், ‘‘உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கிக் குவித்து வருவதால், தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி வருகிறது என்றனர்.சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.112க்கு விற்பனையாகிறது.
The post தங்கம் விலை 2 நாட்களில் ரூ.2,120 உயர்வு : ஒரு சவரன் ரூ.72,000ஐ தாண்டியது; நகை வாங்குவோர் வேதனை! appeared first on Dinakaran.