தங்கம் வாங்கும் பெண்களுக்கு கவனம் தேவை: நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு சிறப்பு பயிற்சியில் அறிவுறுத்தல்

5 hours ago 2

திருத்துறைப்பூண்டி, பிப்.6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு மற்றும் சிறப்பு பயிற்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டியன் முன்னிலை வகித்தார். முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி, திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் பரமேஸ்வரி முன்னிலை வகித்தனர். திருவாரூர் ரமேஷ், மன்னார்குடி வேல்முருகன் கலந்துகொண்ட மகளிர் நுகர்வோர்களுக்கு அயோடின் உப்பு உபயோகிக்க வேண்டும் மற்றும் நுகர்வோர் சட்டப்பிரிவு உபயோகிக்கும் முறை பற்றி தெரிவித்தனர். திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் பேசுகையில், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் தங்க நகைவாங்கும் பெண்கள் தங்க நகை வாங்கும் போது நன்கு பரிசோதித்து வாங்கவேண்டும். தங்கத்திற்கும் செம்புக்கும் கிராமுக்கு ரூ.8,700 என்று ஒரேவிலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால் நுகர்வோர் மக்கள் நன்கு தெரிந்தே ஏமாறும் நிலை உள்ளது. இது போன்ற விஷயங்களில் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நஷ்ட ஈடு பெறலாம், காபி பொடி வாங்கும் போது கூட அசல் காபி பொடி உடன் சிக்கிரி பவுடர் கலந்து விற்கப்படுகிறது. ஆனால் அசல் காப்பி பொடிக்கு ஒரு கிலோ ரூ.800 என்றும் சிக்கிரி கிராம் பத்து ரூபாய்க்கு விலை நிர்ணயித்து கலந்து நியாயமாக விற்கபபடுகிறது. போலிதங்கத்தை கண்டறிய வேண்டிய அரசு அலுவலர்கள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை. இதுபோன்ற நுகர்வோர் பயிற்சி கூட்டங்கள் சம்பந்தப்பட்ட நுகர்வோர் துறை உணவுப்பொருள் துறை அலுவலர்களுக்கு இதுபோன்று தங்கத்தில் போலி உணவு பொருள் கலப்பட மிளகுடன் பப்பாளி விதை மற்றும் மண் கலப்பது என்பதை உடன் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க அங்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவும் நுகர்வோர் உரிமை பாதுகாக்கவும் தகவல் உரிமைச்சட்டம் என்ற புதிய சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் சாதாரண லெட்டரில் ரூ.10 நீதிமன்ற வில்லை ஒட்டி போலி தங்கம் விற்பனை ரேஷன் கடை அரிசியில் எடை குறைவு போன்றவற்றை தெரிவித்து நுகர்வோர் துறை அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பலாம். 30 நாட்களில் அரசுத்துறை நடவடிக்கை எடுத்து பதில் அளிக்கும். ஆதலால் இதுபோன்ற நுகர்வோர் பயிற்சி வகுப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்டு கூட்டத்தில் தெரிவிக்கப்படும் நுணுக்கமான விவரங்களை மகளிர் அனைத்து பிரிவினருக்கும் நன்றாக தெரிவித்து பயனடைய செய்ய வேண்டும் என்றார். கூட்டத்தில் முருகானந்தம், ஜான்சி ராணி, வேம்பையன் மற்றும் நுகர்வோர் உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர்.

The post தங்கம் வாங்கும் பெண்களுக்கு கவனம் தேவை: நுகர்வோர் சட்ட விழிப்புணர்வு சிறப்பு பயிற்சியில் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article