புதுடெல்லி: பிரபல கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா என்கிற ரன்யா ராவ். கடந்த மார்ச் 3 ஆம் தேதி துபாயில் இருந்து பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.12.56 கோடிக்கு மேல் மதிப்புள்ள 14.2 கிலோ தங்கக் கட்டிகளை சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மீட்டனர். அவர் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்திய புகாரின் பேரில் இந்த திடீர் சோதனை மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர் மீது அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34.12 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள விக்டோரியா லேஅவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பு வீடு, அர்காவதி லேஅவுட்டில் உள்ள ஒரு குடியிருப்பு நிலம், தும்கூரில் ஒரு தொழில்துறை நிலம், ஆனேகல் தாலுகாவில் ஒரு விவசாய நிலம் ஆகியவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சொத்துக்களின் மொத்த நியாயமான சந்தை மதிப்பு ரூ.34.12 கோடி என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post தங்கம் கடத்தல் வழக்கு நடிகையின் ரூ.34 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.