தங்கக் கடத்தல்.. கேரள ஆளுநர் – முதலமைச்சர் இடையே முற்றும் மோதல்: குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் முடிவு

3 months ago 19

திருவனந்தபுரம்: மலப்புரம் தங்க கடத்தல் தொடர்பான கருத்து விவகாரத்தில் மோதல் முற்றிய நிலையில் கேரள முதலமைச்சர் மீது குற்றச்சாட்டி குடியரசு தலைவருக்கு அம்மாநில ஆளுநர் அறிக்கை அனுப்ப எடுக்க முடிவு செய்துள்ளார். மலப்புரத்தில் ஹவாலா பணம் மற்றும் தங்க கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அண்மையில் செய்தித்தாள் ஒன்றுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டியளித்த இருந்தது சர்ச்சையானது.

இது மலப்புர மக்களை இழிவுப்படுத்தும் பேச்சு என கூறி அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனிடையே முதலமைச்சர் கருத்து தொடர்பாக இன்று மாலை நேரில் விளக்கம் அளிக்கும்படி தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு ஆளுநர் ஆரீஃப் கான் உத்தரவிட்டு இருந்தார். இதற்கு ஆட்செபனை தெரிவித்து இருக்கும் பினராயி விஜயன் தலைமை செயலாளர் மற்றும் டிஜிபி-யை வரவழைத்து விளக்கம் கேட்க ஆளுநருக்கு அரசியல் சாசனப்படி எந்த உரிமையும் இல்லை என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்.

அதே வேளையில் முதலமைச்சர் முறையான விளக்கம் அளிக்காத காரணத்தால் தான் தலைமை செயலர் மற்றும் டிஜிபி-யிடம் விளக்கம் கேட்கப்பட்டதாக ஆளுநர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post தங்கக் கடத்தல்.. கேரள ஆளுநர் – முதலமைச்சர் இடையே முற்றும் மோதல்: குடியரசு தலைவருக்கு அறிக்கை அனுப்ப ஆளுநர் முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article