'தக் லைப்' படத்தின் ஓடிடி ரிலீஸ் - கமல்ஹாசன் கொடுத்த முக்கிய அப்டேட்

7 hours ago 2

மும்பை,

'தக் லைப்' படக்குழு தற்போது மும்பையில் புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது.

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 'தக் லைப்' படம் உருவாகியுள்ளது. இதில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில், 'தக் லைப்' படக்குழு தற்போது மும்பையில் புரமோசன் பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது பேசிய கமல்ஹாசன் , தக் லைப் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்தார்.

அதன்படி, 'தக் லைப்' திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு 8 வாரத்திற்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என கமல்ஹாசன் கூறினார். மேலும், இந்த முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் நெட்பிளிக்ஸ் ஏற்றுக்கொண்டதாகவும், இதுதான் திரைத்துறைக்கு ஆரோக்கியமான போக்கு எனவும் அவர் கூறினார்.

Read Entire Article