ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் மசூதி சேதம்: புதுப்பித்த இந்திய ராணுவம்

7 hours ago 4

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இருந்தாலும் இந்திய சுற்றுலாவில் அந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.

இந்தநிலையில் பாகிஸ்தானின் சமீபத்திய எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல் ஜம்மு காஷ்மீரில் உள்ள மசூதியின் கூரைக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இரும்பு தகர கொட்டகைகள், அத்துடன் சூரிய தகடு அமைப்பு மற்றும் பிரார்த்தனை அறைக்குள் உள்ள மேட்டிங் போன்றவை கடுமையாக சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் உள்ளூர் சிறுபான்மையின மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. குறிப்பாக அங்கு வசிக்கு மக்களுக்கு இந்த மசூதி தான் மைய வழிபாட்டுத் தலமாகவும், ஊர் மக்கள் ஒன்றாக கூடும் இடமாகவும் இருந்து வந்தது. இதை உணர்ந்த இந்திய இராணுவம், மசூதியை பழுதுபார்க்கும் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு புதுப்பித்தது. கூரையை சரிசெய்து, சூரிய சக்தி அமைப்பை மீட்டெடுத்ததோடு மட்டுமின்றி சேதமடைந்த மேட்டிங்கை மாற்றியது. தற்போது உள்ளூர் மக்கள் மசூதியை மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் இந்திய ராணுவத்தின் உதவிக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குவதில் ராணுவத்தின் பங்கை உள்ளூவாசிகள் வெகுவாக பாராட்டினர்.

Read Entire Article