போடி, ஜன. 26: தேனி மாவட்டம், போடி அருகே மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பொட்டல்களம் வினோபாஜி தெருவை சேர்ந்தவர் வசந்தகுமார்(23). இவர் தனது அண்ணன் சதீஷ்குமார்(26) அண்ணி மவுனிகா (23) ஆகியோருடன் வசித்து வருகிறார். அதேபகுதியைச் சேர்ந்த மகன் பாலமுருகன்(30). இவரது தங்கை பானுமதி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வசந்தகுமாரின் பெரியப்பா மகன் தமிழரசன் என்பவருக்கும் பானுமதியுடன் தகாத உறவு ஏற்பட்டு, 2 மாதங்களுக்கு முன்பு அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறினர்.
அவர்களுக்கு வசந்தகுமார் குடும்பத்தினர் உதவியதாக நினைத்த பாலமுருகன் அவர்கள் மீது கோபத்தில் இருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பாலமுருகன் குடும்பத்தினர், வசந்தகுமாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த வசந்தகுமார், சதீஷ்குமார், மவுனிகா ஆகியோரை தாக்கியுள்ளனர். வசந்தகுமார் குடும்பத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு இருதரப்பைச் சேர்ந்த வேறு சிலரும் திரண்டதால் கோஷ்டி மோதலாக மாறியுள்ளது.
இதில் இருதரப்பைச் சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 18 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வசந்தகுமார், பாலமுருகன் ஆகியோர் தனித்தனியே போடி தாலுகா காவல் நி லையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் எஸ்.ஐ விஜய் மற்றும் போலீசார் இருதரப்பினரைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தகாத உறவு விவகாரம் கோஷ்டி மோதலில் 7 பேர் படுகாயம்: 20 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.