தகாத உறவு வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அரசு அதிகாரியை மிரட்டிய பெண் கைது

5 hours ago 2

திண்டுக்கல்: அரசு அதிகாரியுடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தவெக பெண் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள சின்ன அய்யங்குளத்தை சேர்ந்தவர் ரீட்டா (48). இவர், தமிழக வெற்றிக் கழக பிரமுகர். அக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். இவர், திண்டுக்கல்லைச் சேர்ந்த 57 வயது அரசு பொதுப்பணித்துறை பொறியாளரிடம் தகாத உறவில் இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் உல்லாசம் அனுபவித்ததை வீடியோவாக பதிவு செய்த ரீட்டா, அரசு பொறியாளரிடம் அதை காட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளார்.

பணம் தராவிட்டால் ஆபாச வீடியோவை, குடும்பத்தினருக்கு அனுப்பிவிடுவேன் என மிரட்டியுள்ளார். மேலும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த நிலையில், இது குறித்து திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் அரசு பொறியாளர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரீட்டாவை நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில், ‘அரசு பொறியாளரிடம் ஆபாச வீடியோவைக் காட்டி பணம் பறித்ததை ரீட்டா ஒப்புக்கொண்டுள்ளார். இதேபோல, பலரிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து, பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.

மேலும், அவரிடமிருந்து ரூ.30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்த ரீட்டாவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர்.

The post தகாத உறவு வலையில் வீழ்த்தி ஆபாச வீடியோ எடுத்து அரசு அதிகாரியை மிரட்டிய பெண் கைது appeared first on Dinakaran.

Read Entire Article