தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில்லஹல்லா மின் திட்ட விவரங்களை தருமாறு பெம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

1 week ago 6

ஊட்டி : தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில்லஹல்லா மின் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விவரங்களை தருமாறு பெம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.ஊட்டி இத்தலார் அருகே பெம்பட்டி ஊர் தலைவர் கோபாலன் தலைமையில் பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் சில்லஹல்லா நீர் மின்சார திட்டம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள்.

சில்லஹல்லா திட்ட பணியால் பாதிப்புகளை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சில்லஹல்லா திட்டத்தை எதிர்த்து கடந்த மாதம் 29ம் தேதி இத்தலார் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக அனுமதி இல்லாமல் அடிக்கடி பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுகின்றன.

இதனால் பௌ்ளத்திகொம்பை மற்றும் அன்னமலை கோயில் பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டது. மேலும் சில்லஹல்லா திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு புதிய தேதி அறிவிக்கப்படவில்லை. எனவே கிராமசபை தீர்மானத்தின் அடிப்படையில் சட்டவிரோத வெடிப்புகளை உடனே ஆய்வு அதிகாரிகளை அனுப்ப வேண்டும். திட்டம் தொடர்பான சுற்றுசூழல், புவியியல், சமூக தாக்க மதிப்பீடுகளை வெளியிட வேண்டும்.

பொதுமக்களுக்கு புரியும் வகையில் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெள்ளத்திகொம்பை பகுதியில் பாறைகள் வெடி வைத்து உடைப்பது தொடர்பான விவரங்கள், வெடி வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, அனுமதி வழங்கப்பட்டிருந்தால் எப்போது யாரால் வழங்கப்பட்டது குறித்த விவரங்களை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

நீலகிரியின் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் அவசியமாகிறது. எனவே கிராம சபை தீர்மானத்தை மதித்து சுற்றுச்சூழலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

The post தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில்லஹல்லா மின் திட்ட விவரங்களை தருமாறு பெம்பட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Read Entire Article