த.வெ.க. மாநாடு: விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்

2 months ago 13

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது.

முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன. விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் விஜய் என்ன பேசப் போகிறார் என ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் "இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

இன்று தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் விஜய் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் ❤️ @tvkvijayhq

— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) October 27, 2024
Read Entire Article